பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 127 யானை! யானை கருத்த யானை! எதிலும் பெரிய யானை! சேனை நடத்தும்யானை! தெய்வக் கோயில் யானை! ஆடி நடக்கும் யானை! அல்வா தின்னும் யானை! பாடி அடிக்கும் மணியைப் பாங்காய் அணிந்த யானை! சின்னக் கண்கள் கொண்டது! துதிக்கைக் கையும் கொண்டது! பென்னம் பெரிய காது முறத்தைப் போலக் கொண்டது! யானை என்றால் யானை! அழகு தந்த யானை! பானை வெல்லம் தேங்காய்ப் பழங்கள் தின்னும் யானை!