பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 155 எலுமிச்சம் பழம் ! மங்கள மான மஞ்சள் நிறம்! மனதில் அமைதி கொடுக்கும் நிறம்! எங்கும் எந்த விழாக்களிலும் இடம்பெறும் பழமே இதுவாகும்! ஆசான் அரசன் போன்றோர்கள் அன்பால் ஏற்கும் பரிசுப்பழம்! பூசை, மந்திர தந்திரத்தில் பொருத்தமாய் அமைவதும் இப்பழமே! கனியாய் நம்மிடம் வந்தாலும் காயாய் மாறி ஊறுவதாம். இனிக்கும் பானம் என்றாலே - எலுமிச்சம் பழமே நினைவு வரும்: ஏறும் சூரியன் வெப்பத்தால் இரைப்பு களைப்பு மயக்கமெலாம் மாறிக் குளுமை உடல்பெறவே மருந்தாய் ஆவதும் இப்பழமே! •:- - - - -