பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 61 நூறு நூறு சீடை நூறு நூறு சீடை! நொறுக்கித் தின்னும் சீடை! ஆரு கொடுத்த சீடை? - புதுாரு அத்தை கொடுத்த சீடை! சீனி இனிப்புச் சீடை தேனாய்க் கரையும் சீடை! ஏனம் போலப் பையில் - அத்தை எனக்குக் கொடுத்த சீடை 'கடக்கு முடக்குச் சீடை! காரம் போட்டச் சீடை! அடக்க முடியா ருசியை - எனக்கே அதிகம் கொடுக்கும் சீடை! பாலு, சுந்தர், மீரா பங்கு கேட்கும் சீடை! நாலு நாலாக் கொடுக்க - அவர்கள் நட்பை வளர்த்த சீடை! ராமி அத்தை கொடுத்த ராஜா தின்னும் சீடை! சாமி பேரைச் சொல்லித் - தின்னும் சாக்லேட் போன்ற சீடை!