பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு 181 தொப்பி தொப்பிகள் எத்தனை தொப்பிகள்! சொகுசு மிகுந்தத் தொப்பிகள்! கப்பல் காரன் போலவும் காவல் காரன் போலவும் உப்பிக் குழிந்து மடிந்தே உசந்து நிற்கும் தொப்பிகள்! ஜோதி முருகன் தொப்பிச் சுத்தப் பச்சைத் தொப்பி! ஆதி பகவன் தொப்பி! அழகு சிவப்பு தொப்பி! தம்பி விசுவின் தொப்பித் தவிட்டு நிறத்துத் தொப்பி! கம்பிக் கோட்டுத் தொப்பி கந்த சாமித் தொப்பி! சுந்தர் போடும் தொப்பி துப்பாக்கிக் காரன் தொப்பி! இந்திரன் போடும் தொப்பி இங்கிலீஷ் காரன் தொப்பி !