பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்து போன நாற்காலி: இரண்டு கால்கள் உள்ள மனிதர் இங்கும் அங்கும் நடக்கிறார். ஏணி மேலே காலை வைத்தே ஏறி ஏறிச் செல்கிறார். குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே குதித்துத் தாவிக் கடக்கிறார். குடுகு டென்று வேக மாகக் குதிரை போலச் செல்கிறார். இரண்டு கால்கள் உள்ள மனிதர் இவற்றை யெல்லாம் செய்கையில் இரண்டு மடங்கு கால்கள் எனக்கு இருந்தும் சும்மா இருப்பதோ? இருந்த இடத்தில் இருந்து இருந்து - எனக்குச் சலித்துப் போனதே. இன்றே நானும் மனிதர் போலே எங்கும் நடந்து சொல்லுவேன். இப்படிநான்கு கால்கள் கொண்டஒரு நாற்கா லியுமே நினைத்ததுவே. நகர்ந்து நகர்ந்து சென்றதுவே: நலமாய் முகப்பை அடைந்ததுவே. எட்டுப் படிகள் வாசலிலே இருந்தன. அவற்றில் இறங்கிடவே. முன்னங் கால்கள் இரண்டையும் முதலாம் படியில் வைத்ததுவே. 144