பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சை நிறத்துக் கண்ணனோ பார்க்க அழகாய் இருந்ததால் எச்சில் படுத்தித் தின்னவே எனக்கு விருப்பம் இல்லையே! அறையில் மாடம் இருந்தது. அதிலே வைத்தேன், கண்ணனை: உறங்கிப் போனேன், இரவிலே, ஒன்றும் அறியேன் நானுமே. காலை எழுந்து பார்க்கையில் கான வில்லை கண்ணனை. நாலு புறமும் வீட்டினுள் நன்கு நானும் தேடினேன். அப்பா வந்தார்; கூறினேன். அவரும் தேடிப் பார்த்தனர். அப்போ தவரின் கண்களோ அறையின் ஒரம் பார்த்தன. ஓர மாகச் சென்றுநான் உற்றுப் பார்த்தேன் அவருடன். சாரை சாரை யாகவே தரையில் கண்டேன், எறும்புகள். பச்சை நிறத்துக் கண்ணனைப் பங்கு போட்டே எறும்புகள் இச்சை யோடு வாயிலே எடுத்துக் கொண்டு சென்றன. 147