பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் தம்மை மாளி கைக்கு அவர் அழைத்தனர். தித்திப் பான பண்டத் தோடு விருந்து வைத்தனர். விருந்து கவர்னர் அளித்ததாலே பெருமை கொண்டனர்; மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர் உண்ண லாயினர். அந்தச் சமயம் ராஜாஜி, சிறுவன் ஒருவனின் அருகில் சென்று சிரித்துக் கொண்டே காதைப் பிடித்தனர். 'உன்றன் காதைப் பிடித்து நானும் முறுக்கும் போதிலே உனது மனத்தில் இதனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அகிம்சை என்று இதனை நீயும் கருது கின்றாயா? அன்றி இம்சை என்றே இதனைக் கூறு கின்றாயா?" மகிமை மிக்க தலைவர் இதனைக் கேட்ட வுடனேயே மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன் கூற லாயினன். 173