பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விமலா: ஆகா ஆகா! அதோ பார். அழகு ரோஜா மலரைப் பார்: வேக மில்லை, கோப மில்லை, மெல்ல மெல்ல வருகுது பார்: 蕊心邻》貂翼 பட்டுப் போன்ற மலர்.இது பையப் பைய வருகுது. தொட்டுப் பார்க்கும் ஆசையைத் தூண்டு கின்ற மலர்இது! விமலா: மலர்க ளுக்குள் அரசியாய், மணம் பரப்பும் மலரிது! உலக முழுதும் போற்றிடும் உயர்ந்த ஜாதி மலரிது! టెవ్సీు; தெய்வத் திற்குச் சூட்டலாம்; திரும ணத்தில் அணியலாம்; கையில் ஏந்தி நுகரலாம்; களிப்பை ஊட்டும் மலரிது! விமலா: நேரு வுக்குப் பிடித்தது; நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது; பாரில் இதனைப் போலவே பார்த்த துண்டோ ஒருமலர்! 岛翅剑岛柠> - இல்லை இல்லை, ரோஜாவும் ஏதோ பேசப் போகுதே! விமலா: நல்ல தைத்தான் பேசிடும்; நாமும் அதனைக் கேட்கலாம். 182