பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அண்ணாமலையின் ஆசை


அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம்?
ஆனை முதுகில் ஏறிச் செல்ல
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம்?
ஆற்றுக் குள்ளே படகு விடவே
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம்?
ஆகா யத்தில் விமானம் ஒட்ட
ஆசை என்றானாம்.
அண்ணாமலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம்?
அமெரிக் கர்போல் நிலவில் இறங்க
ஆசை என்றானாம்!

27