பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னம்

பாலைப் போன்ற வெள்ளை நிற
அன்னத்தைப் பாராய்-அது
படகு போலே அசைந்தி டாமல்
நீந்துது பாராய்.

நீள மாக வளைந்தி ருக்கும்
கழுத்தி னைப் பாராய்-அதோ
நீரில் தலையை விட்டு மீனைப்
பிடிக்குது பாராய்.

அன்னை முதுகில் ஏறிச் செல்லும்
குஞ்சுகள் பாராய்-அவை
அச்சம் வந்தால் சிறகுக் குள்ளே
ஒளிவதைப் பாராய்.

கன்னங் கரிய நிறத்தில் கூட
அன்னம் இருக்குதே!-அதைக்
காண லாமே மிருகக் காட்சி
சாலை தன்னிலே!