பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


“முட்டாளே காலணிகளுக்கா 25 பணம் தந்தாய்?” என்று கோபித்துக் கொண்டான்.

முதல் மனிதன் பொறுமையிழக்காமல் “நீங்கள் மறுப்பீர்களானால், அவர்களையே போய் கேட்கலாம்; வாருங்கள், ஆனால் ஆத்திரப்படாமல் சற்று அமைதிகாத்துக் கொள்ளுங்கள். இப்போது சினந்து கொண்டது போல் சினந்துக் கொள்ளாதீர்கள்” என்றான். அவன் மேலும் மற்றொரு காலணியைத் தற்போது உயர்த்திக் காண்பித்து “இந்தக் காலணியும் அந்த விலையில் அடக்கம் தான்” என்றான்.

99. ஆவி கேட்டப் பணம்

நடை பயணி ஒருவர் தம் உடைமைகளையெல்லாம் கட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சாத்தூர் வழியாக வந்தபோது, அங்கு வறுமை தாண்டவமாடியதும் பலபோ படடினியால் மடிந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளினால் சத்திரங்கள் பல மூடப்பட்டிருந்தன. வழிப்போக்கர்கள் கோயில்களில் தங்கி வந்தனர். அப்படி ஒரு கோயிலில் தங்கும்போது பல கல்லறைகள் அச்சத்திரததின் கீழ்ப் பகுதியிலும், ஒரே ஒரு கல்லறை மட்டும் மேற்குப் பகுதியிலும் இருப்பதைக் அந்த வழிப்போக்கன் கவனித்தான். நன்றாக இருண்டிருந்த மூன்றாம் சாமத்தில் ஒவ்வொரு கல்லறையிலிருந்தும் மெலிந்த கைகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. மேற்குப் பகுதியிலிருந்த கல்லறையிலிருந்தும் ஒரு கை வெளியே நீடடிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கை மட்டும் சதைப்பிடிப்புள்ள கையாகத தோன்றியது. நிலமையைப் புரிந்து கொண்ட வழிப் போக்கன்