பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்




102. பணம் பெறுதல்

இரண்டு தங்கக் கட்டிகள் அனுப்பும்படி நகைக்கடை ஒன்றுக்குக் குறிப்பாணை ஒன்றினை அனுப்பினார் அரசு அதிகாரி ஒருவர். குறிப்பாணை பெற்றதும் தங்கக் கட்டிகளை அதிகாரியிடம் கொடுத்து விலைதனைப் பெற்று வர நகை வணிகர் புறப்பட்டார். அதிகாரியைக் கண்டு தங்கக் கட்டிகளை அவரிடம் கொடுத்தார். இரண்டு கட்டிகளையும் பெற்றுக் கொண்ட அதிகாரி தங்கக் கட்டிகளின் விலையினைக் கேட்டார். விலையினைக் கூறியபின், நகைவணிகர் தங்களுக்காக 50% தள்ளுபடி செய்து தருகிறோம்” என்றார். உடனே அதிகாரி இரண்டில் ஒரு கட்டியினை அவனிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை எடுத்துக் கொண்டார். பணத்தைப் பெற நகை வணிகர் நின்றார். “ஏன்? நிற்கிறாய். நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக் கட்டிக்குத்தான் அப்போதே பணம் தந்து விட்டேனே” என்றார் அதிகாரி. “என்ன?” அதிர்ந்தான் நகை வணிகர். சினம் கொண்டார் அதிகாரி “நீ தானே சொன்னாய் உங்களுக்காக விலையில் 50% விழக்காடு தள்ளுபடி செய்து தருகிறோம் என்று. நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக்கட்டிக்கு விலையாக மற்றொரு கட்டியைத்தான் திரும்பத் தந்து விட்டேனே. இன்னும் இங்கு ஏன் நிற்கிறாய். தாமதியாதே ஓடு ஓடு” என்று விரட்டினார் அதிகாரி, நகை வணிகரை.

103. ஓர் உண்மையான ஆசை

மனிதர்களின் உருவப்படங்களை வரையும் ஓவியர் ஒருவருக்கு அவர் தொழில் மிகவும் மந்த நிலையில்