பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

113


உதைத்தான். “நான் ஏற்கனவே இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது” என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன்” பின் ஏன் இவ்வாறு சொன்னாய் என்று மீண்டும் அடித்தார். சற்று நேரத்துக்குப் பின் வேறு ஒரு வாடிக்கைக்காரர் வந்து இறைச்சியை எடுத்து ஆய்ந்து பார்த்தார். பின்னர் அவர் கேட்டார் “தோல் மிகவும் தடிப்பாக உள்ளதே. இது சோயாவிலிருந்து உண்டாக்கப்பட்டது தானே” என்றார். கடைக்காரரின் மகன் உடனே, “நான் ஒன்றும் அதுபற்றிச் சொல்லமாட்டேன். ஏன் அது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்? 'ஊகூம், நான் சொல்ல மாட்டேன்” என்றான்.

110. குறைப் பிறப்பு

பெண்ணொருத்திக்கு ஏழு மாதத்தில் குழந்தை யொன்று பிறந்தது. குறைப் பிறப்பானதால் எங்கே குழந்தை இறந்து விடுமோ என்ற அச்சத்தில் பலரிடம் அது பற்றி உரையாடினான் அப் பெண்ணின் கணவன். ஒருநாள் நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கூறினான். “என் தாத்தா கூட உன் மகனைப் போல ஏழு மாதத்தில் பிறந்தவர்தான், எனவே அஞ்சத் தேவையில்லை“ என்றார் அந்த நண்பர். உடனே இந்த மனிதன் ”உன் தாத்தா வாலிபப் பருவம் வரை வாழ்ந்தாரா அல்லது ... என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

111. கிளைகளைத் தேடி ஒருவன்

‘ப’ வடிவத்தில் வளருகின்ற மரக்கிளைகளை வெட்டி முக்காலிக்குக் கால்களாகப் பயன்படுத்தி வந்தனர் சிற்றூர் வாசிகள். அப்படி ஒருவர் வீட்டின் முக்காலியின் கால்