பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


கத்தால், கிடைத்த பதவியை இழந்துவிடுவான் என்று அவன் தந்தை உணர்ந்தார். எனவே அத்தகைய மிதமிஞ்சிய குடியைத் தவிர்க்கும்படி மகனுக்கு அறிவுரை வழங்கி ஒரு மடல் எழுதினார்.

அறிவுரையின் விளைவாக மகன் சிற்றரசு, தன் முதல் மாத ஊதியத்தில் பெரிய அளவிலான தங்கக் கோப்பை ஒன்றினைச் செய்தான். அக்கோப்பையில் “தந்தையின் மொழிகளை மறவாதே. ஒரு முறைக்கு மூன்று கோப்பைக்குமேல் அருந்தாதே” என்று பொறித்து வைத்தான். இச்சொற்றொடர் பின்னர் அப்பகுதி மக்களிடையே பொதுமொழியாப் பழமொழியாய் மாறியது.

9. உள்ளுணர்வினால்
உண்டாகும் உவகை

பாண்டியனார் ஓர் அறிஞர். மாலைநேரங்களில் 'மணி என்பவரின் இல்லம் சென்று அவர்களுக்குப் பாடங்கள் கற்பித்து வந்தார். இவர் கவிதையெழுதுவதிலும் நாட்டம் மிக்கவர். ஒருநாள் இரவு திருமணி அவர்களின் இல்லத்தில் இரவு உணவருந்திவிட்டுத் தன் வீடு திரும்பினார் அறிஞர். முன்னிரவு நேரம் அது. முழுநிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது நிலவைக் கண்டார். கவிபாடும் ஆவல் கொண்ட அறிஞர். உணர்ச்சி பொங்கப் பாடினார்.

“கையில் தவழும் அமுதக் கலசத்திற்கு நிகர் ஏதுமில்லை; ஏனெனில் ஆண்டொன்றிற்கு எத்தனை முறைகள் அழகு நிலவை நம் தலைக்குமேல காண முடியும்?”