பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

13


என்ற கவிதையை வடித்தார். கட்டுக்கடங்கா மகிழ்ச்சி கண்டார்; ஓடிச் சென்று தன் வீட்டுக் கதவைத் “பட பட” வென்று தட்டினார். தனது வீட்டு முதலாளியை எழுந்து வரும்படி அபயக்குரல் எழுப்பினார். அறிஞர் போட்டக் கூச்சலில் வீட்டிலுள்ள அனைவரும் திருடோ தீவிபத்தோ ஏற்பட்டிருக்கிறது என எண்ணி அலறியடித்து பரபரப்பாக எழுந்து வந்தனர். அறிஞர் எதற்காக அலறினார் என்பதைப் புரிந்து கொண்ட வீட்டு முதலாளி, “நன்று அப்படியானால் நாம் மதுஅருந்தலாம்; வாருங்கள்” என்று அறிஞரை உள்ளே உணவுக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

10. தள்ளுதல் முன்னொரு காலத்தில்

சேர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் சிறந்த நீச்சல் வீரனாய்ப் புகழ் பெற்று விளங்கினான். ஒருநாள் அவன் மனைவி ஒரு வயதே நிரம்பிய குழந்தையொன்றினை நீரில் மிதக்க விட்டுக் கொண்டிருப்பதை அவ்வழியாய்ச் சென்ற ஒருவன் கண்டு, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்ட போது, அவள் பெருமையுடன், “நன்று; அவன் தந்தையைப் போலவே இவனும் சிறந்த நீச்சல் வீரனாக வேண்டாமா?” என்று கேட்டாள். வந்தவர் வாய்பொத்தி அமைதியாகச் சென்றார்.

11. ஃ என்று அடையாளமிட்ட இடம்

ஒருமுறை வீரன் ஒருவன் ஆற்றைக் கடக்கப் படகில் சென்றான் செல்லும் வழியில் அவன் உடைவாள் நழுவி நீரில் விழுந்தது. விரைந்து அந்த வீரன் வாள் விழுந்த