பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


சிரித்தார். அவர் சிரிப்பின் காரணம் கேட்டபோது அவர் சொன்னார். “உங்களுக்கு உண்மையில் அரை நாள் ஓய்வுண்டு. இந்த விருந்திற்காக நானோ மூன்று நாள் தொடர்ந்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று.

19. காணமற்போன களைபிடுங்கி

உழவன் ஒருவன் கழனியில் தன் களையெடுப்பானை விட்டுவிட்டு வீடு திரும்பினான். களையெடுப்பான் எங்கே என்று அவன் மனைவி கேட்டாள். “மறந்து கழனியில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்று உரக்கச் சொன்னான் உழவன். “உரக்கச் சொல்லாதீர்கள் யாரேனும் கேட்டால் அதனைத் திருடிச் சென்று விடுவர்” என்றாள். பின்னர் அடுத்தவர் சென்று திருடிச் செல்லுமுன், முந்திச் சென்று எடுத்து வாருங்கள்” என்றாள் மனைவி. அவனும் அவ்வாறே விரைந்து சென்று களைபிடுங்கியைத் தேடினான். களைபிடுங்கியோ காணமற் போய்விட்டது. வருத்தத்தோடு வீடு திரும்பினான். ஆவலோடு நின்றிருந்த மனைவியை அருகில் அழைத்தான். அவள் காதருகில் குனிந்து “அதனைக் காணவில்லை” என்று அக்கம் பக்கத்தினர் காதில் விழுந்துவிடாத வண்ணம் சொன்னான் அந்தப் பைத்தியக்காரன்.

20. அம்மணமாய் ஓர் அதிகாரி

கொடிய வெயில். பகலெல்லாம் உழைத்தப் பின் பொதுக்குளியல் அறைக்கு வந்தார், ஒரு கீழ்மட்ட அரசு அதிகாரி ஒருவர். குளித்து முடித்தபின், தன் ஆடையையும்,