பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த. கோவேந்தன், டிலிட்.,

23


இருந்த பழைய நாள்காட்டியைக் கழற்றிக் கொடுத்தார். இதனைக் கண்ணுற்ற வீட்டு வேலைக்காரி அந்த பழைய நாள்காட்டியால் அந்த மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாள். “எனக்கும் தான் அதனால் இனி எந்தப் பயனுமில்லை” என்று சொல்லியவாறு நாள்காட்டியை அஞ்சல்காரனிடம் கொடுத்தான். அந்த வீட்டுக்காரன்.

24. களவு

திருட்டுக் குற்றத்திற்காக மரக்கட்டையொன்றில் ஒரு மனிதன் பிணைக்கப்பட்டிருந்தான். அதனைக் கண்ட அவன் நண்பன் “என்ன நடந்தது?” என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடன் “இது எனது போகூழ்; அவ்வளவுதான். தற்செயலாக வீதி வழியே செல்லும்போது ஒரு சிறிய கயிற்றினைக் கண்டு கையில் எடுத்தேன்” என்றான்.