பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

27


வண்ணம் தீட்டினான். கடன் கொடுத்தவன் திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடக்கின்றன என்று நம்பும்படிச் செய்யவே இவ்வாறு செய்தான்.

சில நாள்களுக்குப்பின் அந்த வீட்டின் வழியாகக் கடன் கொடுத்தவன் சென்றான். பின் அவ் வீட்டு வாசலில் நின்று கடன் வாங்கியவன் இருக்கிறானா? என்று விசாரித்தான். வீட்டின் உள்ளிருந்து “எனது கணவர் வெளியில் சென்றிருக்கிறார்” என்று பெண் குரல் கேட்டது. இவ்வாறே கடன் கொடுத்தவன் பல நாள் கடன் வாங்கியவனைத் தேடிச் சென்றான். ஒவ்வொரு முறையும் அதே பெண்குரல் வழக்கமான பதிலையே தந்தது. சந்தேகமுன்ற கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கண்ணாடிப் பலகணி வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான். பெண்கள் யாரும் உள்ளேயில்லை. கடன் வாங்கியவனே தன் விரல்களால் மூக்கைப் பொத்திக் கொண்டு பெண் குரலில் அந்த விடையைச் சொல்வதைக் கண்டான். சினம் கொண்ட அவன் பலகணியை உடைத்து உள்ளே சென்று கடன் வாங்கியவனை நையப் புடைத்தான். அப்போதும் அவன் அடியை வாங்கிய வண்ணம் “என் கணவர் கடன் வாங்கியதற்கு என்னை அடிக்கிறீர்களே?” என்று மூக்கைப் பொத்தியவாறு பெண் குரலில் மெல்லக் கேட்டான்.

29. பரபரப்பாக

சிற்றுண்டிச் சாலையை அடைந்ததுமே, “எனக்கு நான் கேட்ட பத்து முட்டை வறுவலை ஏன் இதுவரையிலும் தரவில்லை” என்று கேட்டான் ஒருவன். கடைக்காரனோ அவை ஓர் ஏனத்தில் கொண்டு வந்து கொடுத்து “விரைந்து