பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


நம்மை அவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்ற நோக்கத்தில். நம்மிடம் தெய்வீகக் கொக்கு ஒன்றும், கடற் குதிரையொன்றும் இருப்பதாகச் சொல்லிவிட்டேன். அவர்களும் அவற்றைக் காண வரவிருக்கிறார்கள். என்ன செய்வதென்றே தோன்றவில்லை” என்று “கவலையை விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்றான் மகன்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. பிள்ளையின் தந்தையும் வந்தார். பெண்ணின் தந்தையை அரசர் உடையை அணியச் செய்து, தலையில் மணி மகுடத்துடனும், கையில் வாளுடனும், கூடத்தின் நடுவில் ஒரு மேடையமைத்து அதில் அமரச் செய்தான் அவரின் மகன். “உங்கள் புகழ்மிக்க தந்தை யெங்கே?” என்றார் ஆவலுடன் பணக்கார மாமனார். “அப்பா அவசர அலுவல் காரணமாக எதிர்பாரத நிலையில் வெளியே சென்றுள்ளார் என்றான் மருமகன். “உங்கள் தந்தை தெய்வீகக் கொக்கினையும், கடற்குதிரையையும் எனக்குக் காட்டுவதாகச் சொல்லி என்னை அழைத்தார். அவற்றைப் பார்த்துவிட்டுச் செல்லத்தான் வந்தேன்” என்றார் அவர். மருமகன் சொன்னான் “அடடா, போகூழ் நிலையில் இரண்டுமே இப்போது இங்கு இல்லையே. எங்கள் கடற்குதிரையை இப்போது தான் கடல் அரசன் பவனி வர இரவல் வாங்கிச் சென்றான். விண்ணகத்தில் நடக்கும் விருந்தொன்றில் கலந்து கொள்ள கொக்கினை இரவலாக அழைத்துச் சென்றுள்ளது தேவதை” என்று. இதனைக் கேட்டு வியப்பு இன்னும் அதிகமாகக் கூடத்தின் இடையில் அரச பாவனையில் வீற்றிருக்கும் பெண்ணின் தந்தையைச் சுட்டிக் காட்டி “இதன் தெய்வீகத் தன்மையென்ன?” என்றார் பிள்ளையின் தந்தை. மருமகன் “அதுவா, இவர் எங்கள் உறவினர் வணக்கத்திற்குரிய பொய்யரசர்” என்றான். வந்தவர் திகைத்து நின்றார்.