பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்,

71




69. மிகைப்படுத்துதல்

இரண்டு மனிதர்கள் சந்தித்தபோது வெறுப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “ஏன் உன் முகம் கடுகடுத்துக் காணப்படுகிறது” என்றான் ஒருவன். மற்றவன் சொன்னான், “நான் நாட்டின் இடையில் வாழ்கிறேன் எந்த ஒலியும் என் காதில் விழாதிருப்பதில்லை. நாட்டின் எந்தச் செய்தியும் எனக்கு எட்டாமல் போவதில்லை. பின்னிரவில் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் வேளை, மேலை வானகத்தில் எழுப்பிய பெளத்த துறவியின் வேத ஒலிகள் என் உயிர் அமைதியை அழித்து விடுகின்றன. எத்தனைதான் வேண்டினாலும், என் வேண்டுதலை அவர் புறக்கணித்து விடுகிறார். சினத்தில் மாமேரு மலையை எடுத்துச் சிறிய கல்லென நினைத்து எறிந்தேன். முற்றிலும் எதிர்பாராத வகையில், கல் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துறவி தன் கண்களைத் துடைத்தவாறு சொன்னார், “என் பார்வையைக் கெடுக்க எங்கிருந்து வருகிறது இந்த தூசி?” என்று கேட்டார். பின் மந்திரம் ஒலிப்பதைத் தொடர்ந்தார், எந்த விதச் சலனமுமின்றி, எனது முயற்சி சிறிது கூட அவரைத் தாக்கவில்லை.”

பின்னர் இந்த மனிதன், அந்த மனிதனிடம் “ஆமாம் உங்கள் முகமும் கடுத்திருக்கிறதே காரணம் என்னவோ?” நேற்று என் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு உண்ணக் கொடுக்க அந்த நேரத்தில் வீட்டில் ஒன்றுமில்லை. எனவே கொசு ஒன்றினை நேரம் பார்த்துப் பிடித்து அதன் நெஞ்சத்தையும் ஈரலையும் பதமாய் வெட்டியெடுத்து தூய்மை செய்து வறுத்து உண்ணக் கொடுத்தேன். யார் எதிர்பார்க்க முடியும்? ஈரல் துண்டுகளில் ஒன்று அவர் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்று. துண்டுகள் பெரி-