பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


“ஏன்? எதற்கு?” என்றார் விருந்து கொடுத்த நண்பர். விருந்தினர் சொன்னார் “நீங்கள் மதுக் கிண்ணத்தில் பாதியளவே மதுவினை ஊற்றுகிறீர்கள். கிண்ணத்தில் எஞ்சிய பாதி பயனற்று வீணாய் தானே உள்ளது. அந்தப் பயனற்ற கிண்ணத்தில் மேல்பாதியை வெட்டித் தள்ளிவிடலாம் அல்லவா?” என்று.


82. வேதனை ஒன்று

விருந்தொன்றில் வந்த விருந்தினர்களில் ஒருவர் அகன்ற பெரிய தட்டில் பரிமாறப்பட்ட வாதுமைப் பருப்பில் பாதியை ஒரே கவளத்தில் அள்ளி விழுங்கினார் விரைவாக. இதனைக் கண்ட விருந்தளித்தவன் ‘ஏன் இப்படி விரிைவாகச் சாப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது அவர் சொன்னார் ‘வாதுமைப் பருப்பு’ நெஞ்சங்குலைக்கு நல்லது’ என்று. இதனைக் கேட்ட விருந்து கொடுத்தவன் “உணவை நன்றாக உண்டு ஐயமின்றி நீங்கள் உங்கள் நெஞ்சத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றீர்கள். ஆனால் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே” என்று எதிர்வான எழுபப்பினார் விருந்தளித்தவர்.

83. கூன் விழுந்த முதுகு

“கூனினை நிமிரச் செய்து அற்புத நலமளிக்கும் வியப்புறு சிகிச்சை; கூனர்கள் நடக்கவும்; குணம் பெறவும்” என்ற மருத்துவர் ஒருவரின் விளம்பரத்தை நம்பி, தன் கூனை நிமிரச் செய்ய அந்த மருத்துவரை நாடினார் ஒருவர். மருத்துவரும் அவரை அன்போடு வரவேற்றுச் சிகிச்சையைத்