பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர்.த. கோவேந்தன், டிலிட்.,

95



உடனே நீதிபதி “ஆமாம் அப்படித்தான், நான் உன் நிலையத்திற்கு வருகை தந்ததே இல்லை” என ஒப்புக் கொண்டு, அவன் அதுவரை பெற்ற தண்டனைக்கு ஈடாக ஆயிரம் பணம் கொடுத்தனுப்பும்படி மறு ஆணை வழங்கினார்.

ஆனால் நீதிபதி குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி அவனது நிலையத்தில் நடந்தது உண்மைதான். ஆனால் அப்போது அவனது நிலையம் வேறொரு மாநிலத்தில் இருந்தது.


93. கையெழுத்து

தெளிவாகக் கையெழுத்து எழுதத் தெரியாத ஒருவன் கையெழுத்து எழுதுவதில் மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்தான். வருவோர் போவோரிடம் அவர்களின் உடமைகளில் அவர்களின் பெயர் மற்றும் அழகிய தொடர்களை எழுதிக் கொடுக்க முனைவதுண்டு. இது அவ்வூரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒருநாள் இந்தக் கையெழுத்து மேதை, எதிரே ஒரு மனிதன் விசிறியால் விசிறிக் கொண்டு தன்னைக் கடந்து செல்வதைக் கண்டு, தன் எழுதும் ஆசையை அடக்க முடியாதவனாக, அவரை அழைத்து அந்த விசிறியில் அவர் பெயரினை எழுதித் தருவதாகச் சொன்னான். உடனே அந்த மனிதன் கையெழுத்துக் கலைஞன் முன் மண்டியிட்டு வணங்கினான். இதனைக் கண்டு திகைப்புற்ற கையெழுத்துக் கலைஞன், இவ்வளவு மரியாதையும் பணிவும் எனக்குச் செலுத்த வேண்டா. நான் சில எழுத்துகளை மட்டும் தான் உங்கள் விசிறியில் எழுதப் போகிறேன்” என்றான். அதற்கு அந்த மனிதன் மறுமொழியாக “நான் அதை நன்கு அறிவேன். நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம் தயவு செய்து அந்தப் பணியை நீங்கள் செய்ய