பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்


அவர்களின் வயிறும் குடலும் ஒரு மணி நேரத்தில் வெடித்துச் சிதறிவிடும்” என்று மூன்று முறை வற்புறுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றார்.

அவர் சென்றதும் முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை அறுத்து சமைத்துச் சாப்பிட்டான். பின் பன்றியின் தொடையையும் தின்று தீர்த்தான். பின்னர் இரண்டு குடுவைகளிலும் இருந்த மதுவில் மூழ்கியெழுந்தான். போதை தலைக்கேறியது.

திரும்பி வந்த ஆசிரியர் சிறுவன் மரக்கட்டை போல் தரையில் கிடந்து உறங்குவதைக் கவனித்தார். அங்கு நிரம்பி வழிந்த மணத்திலிருந்து நிலமையை நன்கு புரிந்து கொண்ட ஆசிரியர் அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார் சினத்தில்.

கண்ணீரில் குழந்தை கதறியது, “நீங்கள் சென்றதும் நான் வீட்டிலுள்ள அனைத்து உடமைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டேன். எல்லாவற்றையும் நான் என் ஆதிக்கத்தில் அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். திடீரென்று பூனை ஒன்று பதுங்கி வந்து பன்றித் தொடையைக் கவ்விச் சென்றது. அடுத்து நாய் ஒன்று ஓடி வந்து முற்றத்தில் நின்று மேய்ந்து கொண்டிருந்தக் கோழியைப் பக்கத்து வீட்டு முற்றத்திற்குத் துரத்தி விட்டது. இந்த முறைகேடுகளைக் கண்டு அதிர்ந்து போன நான், என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். குடுவைகளிலிருந்த மதுவைப் பற்றி நீங்கள் கூறிய எச்சரிக்கை மொழிகள் என் நினைவுக்கு வந்தன. எனவே சிவப்புக் குடுவைலிருந்த மதுவைக் காலி செய்தேன். ஆனால் நான் அதனைக் குடித்த பின்னும் உயிரோடிருப்பதை உணர்ந்தேன். எனவே நான் மஞ்சள் குடுவை மதுவையும்