பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

"என்ன சமாசாரம்?" என்று இவர் கேட்கத் தந்தை செய்தியை விளக்கி, 'கஷ்டம் தெரியாமல் குதிக்கிறான்" என்று சொன்னார். "ஆமாம்; அவன் தை தை என்றுதான் குதிக்கிறான்" என்றார் இவர்.

கயிறு விடுதல்

சீர்காழியிலிருந்து காரில் மாயூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் இவர். அப்போது இரண்டு மாடுகளைக் கட்டிப் பிடித்தபடி ஒருவன் சாலையோரத்தில் வந்தான். மாடுகள் எந்தச் சமயத்தில் குறுக்கே வந்து விடுமோ என்று டிரைவரும் பிறரும் பயந்தார்கள். கார் மெதுவாகப் போயிற்று. அப்போது மாட்டுக்காரன் கயிற்றை விடவே, மாடுகள் வேகமாக எதிர்ப்பக்கத்தில் ஒடி விட்டன. அதுகண்டு காரில் இருந்த அன்பர் "அப்பாடி! கயிற்றை விட்டானே!" என்று ஆறுதல் பெருமுச்சு விட்டார். "உங்கள் ஊர்க்காரர்களுக்குக் கயிறு விடக் கற்றுத் தர வேண்டுமா?" என்ற கேள்வியை எழுப்பினார் இவர்.

(கயிறு விடுதல் - பொய் கூறுதல்; கயிற்றை விட்டு விடுதல்.) - -

பாயசமும் கொல்லுமோ ?

பம்பாயில் பேசப்

போயிருந்தபோது ஒரு حُرمئي ولاة لا கர்த்துகமது வீட்டில் உண்ண அழைத் திருந்தார்கள். இவர் போயிருந்தார். அங்கே மிகவும் அருமையாகப் பால்

பாயசம் பண்ணியிருந்

தார்கள். ஒரு கரண்டி, இரண்டு கரண்டி