பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

அருகில் பாரியூர் என்ற இடத்தில் ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் தீமிதி நடைபெறும். அதற்காகப் பெரிய குண்டம் அமைத்துத் தீ வளர்ப்பார்கள். தீக்குண்டம் இருப்பதனால் அந்தக் கோயிலுக்குக் குண்டத்துக் காளியம்மன் கோயில் என்ற பெயர் வழங்குகிறது. அந்தக் கோயிலை விரிவுபடுத்தி மிகச் சிறப்பான சிற்பங்களை அமைத்து விழாக்களை அமரர் முத்து வேலப்பக் கவுண்டர் நடத்தி வந்தார்.

கி.வா.ஜ. போயிருந்தபோது முத்து வேலப்பக் கவுண்டர் இவருக்கு ஒரு விருந்து வழங்கினார். பல அன்பர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். அது மாம்பழக் காலமாகையால் மிகவும் சுவையான மாம்பழங்களை விருந்தில் பரிமாறினார்கள். பிறகு மாவடு, மாங்காய் ஊறுகாய்களைக் கடைசியில் பரிமாறினார்கள்.

அப்போது இவர், "பிரமன் படைப்பில் காய் வந்து கனி பிறகு வரும்; இங்கே முத்து வேலப்பக் கவுண்டர் படைப்பில் மாறாகக் கனி வந்து காய் வருகிறது" என்று சொல்லி ஒரு வெண்பாவைப் பாடினார்.

சாலப்பன் னாட்பழகித் தாய்போற் பரியு முத்து. வேலப்பன் செய்த விருந்தினிலே ஏல இளிைக்கப் படைக்கும் எழிற்படைப் புக்குள் கணிக்கப் புறம்வருமாங் காய்.

படைப்பு - பரிமாறுதல், சிருஷ்டி கணிக்கு அப்புறம் வருமாம் காய் என்று பொதுவாகவும், கனிக்கு அப்புறம் வரும் மாங்காய் என்று சிறப்பாகவும் கொள்ளும்படி ஈற்றடி அமைந்திருக்கிறது.