பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 96

ஏட்டுத் தயிர்

அந்த விருந்தில் நல்ல தயிரைப் பரிமாறினார்கள். ஆடையுடன் இருந்தது தயிர். இவருக்கு அருகில் அமர்ந்திருந்த நண்பர், "இதை இங்கே ஏட்டுத் தயிர் என்பார்கள்" என்றார். இவர், "எனக்கும் தெரியும், ஆனால் இது ஏட்டுச் சுரைக்காய்போல ஏட்டுத் தயிர் ஆகுமா? உண்மையான தயிர் அல்லவா?" என்று சொல்லி அக்கருத்தை அமைத்து ஒரு வெண்பாவைச் சொன்னார்.

வேட்டுப் பயில்முத்து

வேலப்பன் செய்விருத்தில் ஏட்டுத் தயிர்என்

றெவர் சொன்னார் ? - நாட்டமுடன் கண்டோம் விழியால்

கரத்தாற் பிசைந்தனத்தோடு உண்டோம் இலையோ உவந்து ?

நாட்டமுடன் - விருப்பத்துடன், அனத்தோடு சோற்றோடு.

ஈ, இலை

அப்போது இலையில் ஈ மொய்த்தது. முத்து வேலப்பக் கவுண்டர், "ஒரு மாதத்துக்குமுன் இங்கே ஒரு மகாநாடு நடந்தது. ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தது. அது முதல் அதிகம். இலையில் ஈ மொய்க்கிறது" என்றார்.

உடனே இவர் ஒரு கற்பனையைப் பாவில் உதிர்த்தார்:"இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்