பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 104

இவர் பாடிய பாடல்கள் பல. திருவேட்டீசுவரனைப் பற்றியும் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

"இறைவன் பல ஆடை வகைகள் புனைந்திருந்தாலும் அவனைப் புலவர்கள் திகம்பரன் என்றே சொல்லுகிறார்கள்" என்ற கருத்து அமையச் சிலேடையாக

ஒரு பாடல் பாடினார்.

தலையிலொரு சோமனுளான்;

தங்குகையில் கலையுடையான்; நிலையுடைய வத்திரங்கள்

நீங்கரிய ஐந்துடையான்; விலையுடைய வேட்டியிடை

வித்தகனே ஆயினும்என் ? துலையுடைய நாவுடையோர்

நக்கனென்றே சொல்லுவரே.

சோமன் - வேட்டி, சந்திரன், கலை - ஆடை, மான். வத்திரங்கள்-வஸ்திரங்கள் (ஆடைகள்), வக்த்ரங்கள் (முகங்கள்); இறைவனுக்குத் தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜாதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. விலை உடைய வேட்டியிடை வித்தகன் - விலைமிக்குடைய வேட்டியை இடையிலே உள்ள பெருமான், மதிப்பையுடைய திருவேட்டி என்னும் தலத்தினிடையே உள்ள பெருமான். துலையுடைய நாவுடையோர் - துலாக்கோலைப் போல நடு நிலையில் நின்று பேசும் நாவையுடைய பெரியவர்கள். தக்கன்திகம்பரன். X- - .

"தலையில் முண்டாசு, கையில் அங்க வஸ்திரம், கையிருப்பில் ஐந்து ஆடைகள், இடுப்பில் விலை உயர்ந்த வேட்டி ஆகிய இவ்வளவு இருந்தும், பெரியவர்கள் திகம்பரனென்றே சொல்லுகிறார்களே” என்று தொனிக்கப் பாடியது இது.