பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 108

இரும்புக்கு: வெட்டி எடுத்தலால் - நிலத்திலிருந்து வெட்டி எடுப்பதனால், மேல் ஆலையில் புகலால்அப்பால் உருக்குகின்ற இரும்பாலையில் புகுவதனால், ஒட்டு கரும்பொன் துறுபெயரால் - சார்த்திச் சொல்கின்ற கரும்பொன் என்று சேர்ந்த பெயரினால். சுட்டும் அதன் பல் வடிவம் பெய்து சுட்டிக் காட்டும் அந்த இரும்பினாற் செய்த கம்பி, ஆண் முதலிய பல வடிவப் பொருள்களை இணைத்து. பதிய - அவை பதிவதனால். இல் ஆகுதலால்-வீடு ஆவதனால்,

நிலத்திலிருந்து வெட்டியெடுத்து ஆலையில் உருக்கிப் பதப்பட்டு, கரும்பொன் என்ற பெயரைப் பெற்று, பல வகையான வடிவமுள்ள பொருளாகி வீடு கட்ட உதவுகிறது இரும்பு என்பது கருத்து.

கரும்புக்கு: வெட்டி எடுத்தலால் - பாத்தியிலிருந்து வெட்டி எடுப்பதனால். மேல் ஆலையில் புகலால்அப்பால் கரும்பாலையில் சாறு பிழியப் புகுவதனால். ஒட்டு கரும்பு ஒன்று பெயரால் - சேர்ந்த கரும்பு என்ற பொருந்திய பெயரினால். சுட்டு மதன் யாவரும் சுட்டிச் சொல்லும் காமன். பல் வடிவு அம்பு எய்து பதிய - பல வடிவுகளையுடைய மலராகிய அம்புகளை எய்து பதியும்படி செய்ய வில் ஆகுதலால் - அவனுடைய வில் ஆவதால்,

கரும்பு பாத்தியிலிருந்து வெட்டி ஆலைக்குச் செல்கிறது. கரும்பு என்று பெயர் பெறுகிறது; மன்மதன் தன் பானங்களை வ்ைத்து எய்வதற்கேற்ற வில் ஆகிறது என்பது கருத்து. -