பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 138

சொல்வது என்னே - அவளுடைய அறியாமையை என்னவென்று சொல்வது!

மன்மதன் செய்யும் போரில் கோட்டையிலுள்ள அரண்களைக் கெடுத்து விட்டாள்; அவள் அறியாமை என்னே என்று வேறு ஒரு பொருள் தொனித்தது. கோட்டை உறு துரு கம் - கொம்பைப் பெற்ற ஆட்டின் தலையை, துரு - ஆடு, கம் - தலை. கோட்டை உறு :துருக்கம் - கோட்டையில் உள்ள அரண்களை; துருக்கம்

அரண்கள்.

சுந்தரன் - சம்பந்தன் - அப்பர்

ஒப்பரி தாய ஒருவன் திருக்காந்த

ஓங்க்லிலே r துப்புள னாகிய கந்தரன் றன்னைத்

துருவிஅறிந்து . இப்பெண் ணுடன்மணச் சம்பந்த னாக்கிஇங்

கீதலின்றி * அப்பரைக் கொல்லத் துணிந்தனள் அன்னை;

அவலம் இதே.

ஓங்கலில் - மலையில். துப்பு உளனாகிய சுந்தரன் தன்னை - வலிமை உடையவனும் அழகனுமாகிய தலை வனை. துருவி அறிந்து - ஆராய்ந்து தெளிந்து. இப்பெண்ணுடன் - இந்தத் தலைவியுடன். மணச் சம்பந்தன் ஆக்கி இங்கு ஈதல் இன்றி - திருமணத் தொடர்புடைய கணவனாக்கி இவ்விடத்தில் இவளைக் கொடுத்தல் இல்லாமல். அப்பரை - ஆட்டை அவலம்துன்பம். - .

சுந்தரன், சம்பந்தன், அப்பர் என்ற மூன்று நாயன்மார்களுடைய பெயர்கள் தொனித்தன.