பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ - 144

அவர்களிடம் காட்டி, "துப்பு கிடைத்து விட்டது துப்பு, துப்பு" என்று கூறினார். உடனே கி.வா.ஜ. நீங்கள் பெரியவர். உங்கள் கையில் நான் எப்படி துப்புவது? நீங்கள் துப்புங்கள், நான் ஏந்திக் கொள்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே தன் இரண்டு கைகளையும் நீட்டினார். - ,

தண்டனை . . ஒரு சமயம் சொற்பொழிவில் கி.வா.ஜ. அவர்கள் கூறியது:

பிறர் மனம் தெரியச் செய்வது குற்றம். குற்றத்திற்கு அரசன் தண்டனை வழங்குவான். -

தன் மனம் தெரியச் செய்வது பாபம் - பாபத்திற்கு தெய்வம் தண்டனை அளிக்கும். - --

நமது மனமும் தெரியாமல் செய்வது அறியாமை. அறியாமைக்கு நம்மை நாமே தண்டித்துக் கொள்ள வேண்டும். - - -

‘மாலை போனபின் பழம் கொடுத்தார்

தமிழ்நாட்டிலுள்ள பல சைவ மடத்துத் தலைவர்கள் கூடி குன்றக்குடி மடாதிபதிக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். விழா, மாலை தொடங்கி இரவு வரை நடந்தது. எல்லோரும் ரோஜாப்பூ மாலைதான் அணிவித்தார்கள். ஒரே ஒரு அன்பர் மட்டும் இரவு ஏழு மணி சுமாருக்கு ஆப்பிள் பழம் ஒன்று கொண்டு வந்து கொடுத்து மரியாதை செலுத்தினார். - -