பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார். கி.வா.ஜ 150

பாடினார். அதுதான் வேறுபாடு. "வீனஸ் காலனியில் அருணகிரிநாதர் விழாவில் கி.வா.ஜகந்நாதன். பேசியது.

மனைவியைப் பாராட்டுவதில்லை!

ஒரு சமயம் இவர் ஒரு கூட்டத்தில் பேசியது:

"பெண்களை சுருதி போன்றவர்கள் என்று என் ஆசிரியர் (உ.வே.சா, ஒப்பிட்டு இருக்கிறார்., சங்கீதக் கச்சேரியில் முதலில் தொடங்கிக் கடைசியில் முடிவது "சுருதி தான். சுருதி இல்லாமல் கச்சேரி. இல்லை. அது போலத்தான் நமது இல்லத்தரசிகள் பின் துரங்கி முன் எழுந்து வாழ்க்கைக்கு ரசம் ஊட்டுகிறார்கள். கச்சேரியில் சுருதி போடுபவருக்குப் பாராட்டு இல்லை. அதுபோல தனக்கு உறுதுணையாக இருக்கும் மனைவியை யாரும் பாராட்டுவதில்லை.

இறைவனுக்கு உதவி செய்த இரண்யன்! ஒரு சமயம் கம்பன் கழக வகுப்பில் இவர் பேசியது:

"இரண்யனுக்கும் பிரகலாதனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கடவுள் எங்கிருக்கிறார் என்று கேட்டான் இரண்யன். தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்று பதில் கூறினான் பிரகலாதன். அப்போது தான் இறைவன் பயந்தார். எதற்கு? தூணிலும் துரும்பிலும் அவர் புக முடியாது என்பதாலா? இல்லை. இல்லை. நான், நான் என்று எப்போதும் மார்தட்டும் இரண்யன் தனது நெஞ்சைத் தொட்டுக்காட்டி, "என் நெஞ்சில் இருக்கிறானா? என்று கேட்டுவிடப் போகிறானே என்று தான். காரணம், அவனது நெஞ்சில் அவர் புகுந்து விட்டால் அவன்