பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

ஏற்றுமதியாகும். நாம் கவிதை-இலக்கிய வியாபாரியாக மாற வேண்டும்". - .

வெல்லம் இனிப்பானதானாலும் அவற்றை அச்சுப் போட்டு விற்றால் தான் பாகு வெல்லமாக மாறி விற்பனையாகும். அதுபோல தான் ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் அச்சுப் போட்டால் தான் பரவும் விற்பனையாகும். தமிழ் மக்கள் அதிகப் பிரதிகள் வாங்கிப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும். - - -

உடல் குளிரும் உள்ளம் குளிரும்

தமிழிலக்கியத்திற்கு சேவை செய்த சிலரைப் பாராட்ட மயிலை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஒரு விழா நடந்தது. பரிசு பெற்றவர்களைப் பாராட்டிப் பேசிய கி.வா.ஜ. கூறிய சிலேடை அரங்கத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. - * > .

"இங்கு பரிசு பெற்றவர்களுக்கு குளிர் பானம் அளித்தவர் தொழிலதிபர் பன்னீர்தாஸ். பரிசு வழங்கியவர் திரு.சந்தோஷம். சகோதரர்கள் ஒரு உண்மையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இங்கே குளிர் பானத்தால் உடல் குளிர்ந்தது. பரிசால் உள்ளம் குளிர்ந்தது. இயற்கையும் அப்படித்தான், பன்னீரால் உடல் குளிரும். சந்தோஷத்தால் உள்ளம் குளிரும். இருவரும் உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே குளிர வைத்தனர்".