பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 13

நேரம் தங்க வேண்டியிருந்தது. அப்போது இரண்டு ஜீப்புகளில் மின்சார வாரியத்தைச் சேர்ந்த மேலாளர் திரு. திருநாவுக்கரசும், உயர்நீதி மன்ற நடுவர் திரு. கைலாசமும் அவர் மனைவி பூரீமதி செளந்தரம் கைலாசமும் வேறு சிலரும் சுவாமிகளைத் தரிசனம் செய்ய வந்தார்கள். திரு. திருநாவுக்கரசு இவரிடம், "திரும்புகாலில் எங்களுடன் ஜீப்பில் வந்துவிடுங்கள். பேசிக் கொண்டே போகலாம்" என்றார். ஒப்புக் கொண்டார். சுவாமிகளைத் தரிசித்துக் கொண்டு புறப்பட்டார்கள். இடப் பக்கத்தில் இருந்து ஒட்டும் ஜீப் அது. அதில் பின்னே இவரும் இஞ்சினியரும் அமர்ந்தார்கள். முன் பக்கத்தில் டிரைவரும் அவருக்கு அடுத்தபடி ஜட்ஜும் அவரை அடுத்து பூரீமதி செளந்தரம் கைலாசமும் அமர்ந்திருந்தார்கள். வண்டி போகும்போது சவுக்குக் செடியின் வளார்கள் வண்டிக்குள்ளே புகுந்து வந்தன. அப்போதெல்லாம் செளந்தரம் தம் கணவர் பக்கமாகச் சாய்ந்தார். அப்போது இவர், "ஏன் ? சவுக்கடிக்குப் பயப்படுகிறீர்களோ ? ஆனாலும் ஜட்ஜ் சாய்க்கால் உங்களுக்கு இருக்கிறது" என்றார். பழம்பால்

ஒர் அன்பர் வீட்டுக்கு இவர் சென்றிருந்தார். "என்ன சாப்பிடு

கிறீர்கள்?" என்று கேட்டார் அன்பர். "நான் காபி சாப்பிடுவதில்லை; பால்

தாருங்கள்" என்றார் இவர்.

"பழமும் கொஞ்சம் சாப்பிடுங்கள்" என்றார் அன்பர்.