பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

தட்சகாண்டத்துகிகு உரை எழுதி முடித்திருக்கிறேன். உங்கள் கையால் தொட்டுக் கொடுங்கள்" என்று பண்டிதமணி சொன்னார். அப்படியே இவர் அதைத் தொட்டு வாழ்த்தினார். பண்டிதமணி கற்கண்டைக் கொண்டு வந்து இவருக்கும் உடன் வந்தவர்களுக்கும் கொடுத்தார். "உங்களைக் கண்டு கொண்டு போகலாம் என்று வந்தேன். இதோ கண்டு கொண்டு போகிறேன்" என்று சொல்லி விடை பெற்றார். (கண்டு - பார்த்து, கற்கண்டு.) -

துவக்கமும் தவக்கமும்

சென்னையில் விக்டோரியா இடி சூடா மாணவர் இல்லத்தில் இலக்கிய மன்றத்தின் துவக்க விழா நடைபெற்றது. அதில் இவர் தலைமை தாங்கினார். போட்டி

விளையாட்டு ஒன்று நடந்தமையால் விழாச் சற்றுத் தாமதமாகத் தொடங்கியது.

வரவேற்ற செயலாளர், "இந்த மன்றத்தின் துவக்க விழாவுக்குத் தலைமை தாங்கும்படி கி.வா.ஜ. அவர்களை அழைத்தோம். அன்புடன் ஒப்புக் கொண்டார். எழுத்துலகின் முடிசூடா மன்னர் இவர்." என்று சொல்லி வரவேற்புக் கூறினார். இவர் முன்னுரையைத் தொடங்கினார். "இன்று இந்த மன்றத்தின் துவக்க விழா, தவக்க விழா ஆகிவிட்டது. என்னை முடிசூடா மன்னன் என்றார். இதோ முடியிருக்கிறதே!" என்று தம் தலையைச் சுட்டிக் காட்டியவுடன் கொல்லென்று கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.