பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ .38

ஆண்டு நிறைவு

நண்பர் ஒருவருடைய குழந்தைக்கு ஆண்டு நிறைவு நடக்க இருந்தது. குழந்தை அவருடைய ஊரில் இருந்தது. அங்கேயே ஆண்டு நிறைவு நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதற்குத் தம் தம்பியையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினார். தம்பிக்கு லிவு கிடைக்க வில்லை. இந்தச் செய்தியை அந்த நண்பர் இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "தம்பிக்கு, என் பையன் ஆண்டு நிறைவுக்கு வர வேண்டுமென்று எவ்வளவோ ஆசை. ஆனால் வரமுடியவில்லை. லிவு கிடைக்கவில்லை" என்றார். "உங்கள் பையனுக்கு ஆண்டு நிறைவு. உங்கள் தம்பிக்கு ஈண்டுக் குறைவு" என்றார்

இவர்.

(ஆண்டு - வருடம், அங்கே)

முந்திரிப் பருப்பு

பண்ணுருட்டியில் இவர் நண்பர் ஒருவர் உத்தியோகமாக இருந்தார். அந்தப் பக்கங்களில் நல்ல முத்திரிப் பருப்பாகக் கிடைக்கும். நண்பர் இவரிடம், "இங்கிருந்து முந்திரிப்பருப்பு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. முழு முழுப் பருப்பாக அனுப்புவார்கள். அவ்வளவும் பணம். கடைகளில் முழுப் பருப்புக் கிடைப்பது அருமை" என்றார். "அது முந்திரிப் பருப்பு தானே? முழுப்பருப்பாகுமோ?" என்றார். இவர். -