பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

வாயில் போட்டு

இவருடைய மகள் செள. உமாவின் கல்யாணத்தின் போது காஞ்சிபுரத்துக்கு ஜவுளி எடுக்க ஒரு காரில் போனார்கள். இவருடைய மனைவி, இவர், சம்பந்தியம்மாள், அவருடைய பெண், இவர் புதல்வர் சாமிநாதன் எல்லாரும் போனார்கள். புடைவை முதலியவற்றை வாங்கிக் கொண்டு திரும்புகையில் செங்கற்பட்டு வழியே வர வேண்டியிருந்தது. செங்கற்பட்டுக்கு வந்தபோது காரில் ஏதோ கோளாறு உண்டாகவே, ஒரிடத்தில் அதை நிறுத்தி டிரைவர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாமிநாதன் தாகம் போக்கிக் கொள்ளச் சில பப்பர்மிட்டுகளை வாங்கி வந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தான். இவருக்குக் கொடுக்கவில்லை, வாங்கினது போதவில்லை. மறுபடியும் வாங்கக் கடைக்குப் போனான். அப்போது இவருடைய மனைவி தன் கையில் இருந்ததை இவரிடம் கொடுத்தாள். அதைக் கண்ட சம்பந்தி அம்மாள், "மாமி வாயில் போட்டுக் கொள்ளாமல் மாமாவுக்குக் கொடுக்கிறார்" என்றார். உடனே இவர், "நீங்களெல்லாம் வாயில் போட்டுக் கொண்டுதான் கொடுப்பது வழக்கமோ?" என்றவுடன் அந்த அம்மாள் நானத்தால் தலை குனிந்தாள்.

நெருங்கிப் பழகுதல்

ஒரு பெரிய மனிதர் இவரைத் தம் ஊருக்குப் பேச அழைத்திருந்தார். அவர் இவரைச் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார். உடன் வேறு சிலரும் வந்தனர். காரில் சற்றே நெருக்கமாக இருந்தது. இவரையடுத்து