பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ. 40

அந்தப் பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார். "உங்களுக்கு அசெளகரியமாக இருக்கும்" என்றார் அவர். இவர் உடனே, "உங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை விடலாமா?" என்றார்.

வாசித்தால்

திருமண விருந்து ஆனபிறகு எல்லாரும் கூடத்தில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். சந்தனக் கிண்ணத்தில் நிறையச் சந்தனம் இருந்தது. அது நல்வ சந்தனமாக இல்லை. மணமும் இல்லை. "சந்தனம் பூசிக் கொள்ளாமல் இருக்கிறீர்களே! பூசுங்கள்" என்று இவரைப் பார்த்து ஒருவர் சொன்னார். "வாசித்தால் பூசிக்கலாம். என்று இவர் சொன்ன குறிப்பை அறிந்து கொண்டு அவர் பேசாமல் இருந்து விட்டார்.

(வாசித்தால்-வாசனை வீசினால், படித்தால்; பூசிக்கலாம்-பூசிக்கொள்ளலாம், பூசை செய்து மதிக்கலாம்).

விழுவது இலை

ஒரு சொற்பொழிவில் இவர் சொன்னது: அந்தக் காலத்தில் பணக்காரருக்கும் மற்றவர்களுக்கும் தோற்றத்தில் வேறுபாடு இராது. இப்பொழுதெல்லாம் பணக்காரருக்கு அடையாளம் கார், பங்களா, பாங்கில் பணம், அந்தக் காலத்தில் பணத்தைக் காட்டும் அடையாளம் வேறு உண்டு. "அவர் பணக்காரர்' என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். "எப்படி?" என்று கேட்டால், "அவர் வீட்டில் வேளைக்கு ஐம்பது இலை