பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ. 50

அவர்களை விலகச் செய்வதற்காக, "வழி, வழி" என்று சத்தம் போட்டுக்கொண்டு போனார்கள். அப்போது இவர் கொப்பரையின் வெளியே படிந்திருத்த சந்தனத்தை வழித்துக் கொண்டார். "ஏன் இப்படிச் செய்கிறீர்?" என்று ஒருவர் கேட்டார். "அவர் வழி, வழி என்றாரே!" என்றார். இவர்.

உப்பு மா

ஒரு நாள் இவர் உப்புமா உண்டு கொண்டிருந்தார். இவருடன் சில நண்பர்களும் உண்டார்கள். அப்போது இவர், "இதற்கு உப்புமா என்று ஏன் பெயர் வந்தது?" என்று ஒரு கேள்வி கேட்டார். பரிமாரிய பெண்மணி, உப்புமாவில் உப்பு அதிகமாகிவிட்டதோ? என்று எண்ணத்தோடு மலங்க மலங்க விழித்தாள். உப்புச் சரியாகவே இருந்தது. ஓர் அன்பர் "உப்புப் போட்டுச் செய்வதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்றார்." "இட்டிலிசுட உப்புப் போட்டுச் செய்வது தான். தோசை, அடை முதலிய பலவும் உப்புப் போட்டுச் செய்கிறவை. இதற்கு மட்டும் உப்புமா என்று பெயர் வருவானேன்?" என்று மறுபடியும் இவர் கேட்டார். பிறகு இவரே விளக்கம் கூறினார். "இதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீர் குடிக்கக் குடிக்க வயிற்றில் உப்பிக் கொண்டே வரும்; உப்பும் மா இது. அதனால் இந்தப் பேர் வந்தது."