பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 53

கோயிலில் இருந்த திருக்குளத்தில் இறங்கிக் கால் கழுவிக் கொண்டு வரலாம் என்று சென்றார்கள். "இந்தத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. பாபங்களைப் போக்குவது" என்று ஒர் அன்பர் சொன்னார். படிக்கட்டில் பாசியாக இருந்தது. கால் வைத்தால் வழுக்கி விடும் என்று தோன்றியது. அதைப் பார்த்த இவர், "நீங்கள் இதை வழுக்கெடுக்கும் என்று சொல்கிறீர்கள். அது இருகாலும் உண்மை" என்றார். "இரு காலா? முக்கால் என்று சொன்னால்தானே உறுதியாகும்?" என்று அன்பர் கேட்டார். "வழுவைக் கெடுக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள் அது ஒன்று. இது வழுக்கு எடுக்கும் என்று சொல்கிறேன். அதுவும் பொருந்துமல்லவா? இருகாலும் உண்மை" என்று விளக்கினார் இவர்.

தலையெழுத்து

மயிலம் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் வித்துவான் வே. சிவசுப்பிரமணியன் இவருடைய நண்பர். இவருடைய வீட்டிலுள்ளவர் களைப் போலவே பழகுவார். அவர் மயிலத்திலிருந்து பிற்பகலில் புறப்பட்டு இரவு சென்னையில் உள்ள இவர் வீடாகிய காந்தமலைக்கு வருவார். வே. சிவசுப்பிரமணியன் என்று முழுப் பெயரையும் சொல்லாமல், வேசி என்று இவர் சொல்வார். "இரவில் வேசி வருவது இயல்புதான்" என்று பரிகாசம் செய்வார். ஒரு நாள் வேறு ஒரு நண்பருடன் அப்புலவர் இவர் வீட்டுக்கு வந்தார். இவர் பிள்ளைகள், வேசி வந்தாயிற்று" என்று கூவினார்கள். உடன் வந்த நண்பர், "என்ன? வேசியா? யாரைச் சொல்கிறீர்?" என்று

கேட்டார். "இவரைத்தான்" என்று இவர் புலவரை