பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

மோட்டுப் பூச்சி இருக்குமோ என்று இவர் பயந்தார். "கட்டில் வேண்டாம். மோட்டுப் பூச்சியிருக்கலாம்" என்றார்."இல்லை: இது நாடாக் கட்டில்: இராது" என்று நண்பர் சொன்னார். "நானும் அதைத்தான் சொல்கிறேன். நான் நாடாக்கட்டில் என்று சொல்கிறேன்" என்றார். இவர்; (நாடா - கட்டியிருக்கும் நாடா, நாடாத விரும்பாத)

தந்தி வந்தது

விநாயகர் அகவலைப் பற்றிய சொற்பொழிவு நடைபெறுகிறது. இவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக் களம் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினார். சேரமான் பெருமாள் நாயனார் அரண்மனையில் இருந்தார். ஒளவையார் வழக்கம் போல விநாயகரைப் பூசிக்கத் தொடங்கினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வுலகில் அவதரித்துச் செய்த தொண்டுகள் போதுமென்று எண்ணிய இறைவன் கைலாசத்திலிருந்து வெள்ளை யானையை அனுப்பினான். அது கோயிலுக்குச் சென்று நின்றது. அதைக் கண்டவுடன் சுந்தரர் யார்க்கும் சொல்லாமல் புறப்பட்டு விட்டார். தந்தி வந்தால் உடனே புறப்பட வேண்டியதுதானே? (தந்தி - செய்தித் தந்தி, யானை.)

அருகர் அல்ல

நல்ல சைவராகிய புலவர் ஒருவர் சபையில் பேசத் தொடங்கினார். இவர் தலைமை தாங்கினார். அந்தப் புலவ்ர் அவையடக்கமாகப் பேசுகையில், "இவ்வளவு பெரிய புலவர்கள் பேசும் அவையில் நான் பேச அருகன் அல்ல. இருந்தாலும் அழைத்தார்கள்" என்று சொல்லி