பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

வடமதுரை

ஒரு நாள் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது இவர்,"நான் வடமதுரை" என்றார். "உங்கள் ஊர் மோகனூர் அல்லவா?" என்று ஒர் அன்பர் கேட்டார்.

இவர்: இருந்தால் என்ன? நான் வடமதுரைதான்.

அன்பர். அது எப்படி, இரண்டு ஊர்கள் உங்கள் ஊராகும்?

இவர்: நான் அந்தணர்களில் எங்கள் பிரிவையல்லவா சொன்னேன்? நான் வடமன்.

(வடமதுரை வடமனாகிய துரை.)

கூசாக் குடியர்

இவர் ரெயில் வண்டியில் மனைவியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். கூசா நிறையத் தண்ணீர் வைத்திருந்தார். அருகில் இருந்த நண்பர் ஒருவர் தண்ணீர் கேட்டார். அவருக்குத் தம்ளரில் தண்ணிர் எடுத்துக் கொடுத்தார். இவருக்கும் தாகமாக இருந்தமையால் கூசாவோடு குடித்தார். அதைக் கண்டு அருகில் இருந்த நண்பர் சிரித்தார். "என்ன, கூசாக் குடியர் என்று சிரிக்கிறீர்களா?" என்றார். இவர்.

(கூசாக்குடியர் - கூசாவோடு குடிப்பவர், கூசாத குடிகாரர்.)

தானாகப் போடுதல்

இவருடைய வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். விருந்தாளி