பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8] சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இக்கட்டு

ஒரு முறை ஆப்பக்கூடலில் உள்ள சர்க்கரை ஆலைக்குப் போய் எல்லாப் பகுதிகளையும் இவர் பார்த்தார். அங்குள்ள அன்பர்கள் கரும்பை ஆலையில் புகுத்துவது முதல் சர்க்கரையை மூட்டைகளிற் சேமிக்கும் வரையில் நடைபெறும் செயல் முறைகளைக் காட்டி விளக்கினார்கள். பிறகு சிற்றுண்டி வழங்கினர். கரும்புச் சாற்றை வழங்கினர். அதை உண்ட இவர் மறுநாள் வேறு ஊருக்குச் சென்று பேச வேண்டியிருந்தது. அங்கே போனார். கரும்புச் சாறு சாப்பிட்டதால் இவருக்குத் தொண்டை கட்டி விட்டது. பேச முடியவில்லை. இதைப் பற்றி ஒர் அன்பரிடம் இவர் பிறகு சொன்னது வருமாறு: "இப்படிக் கரும்புச் சாறு தொண்டையைக் கட்டுமென்றால் நான் அதைக் குடித்தே இருக்க மாட்டேன். தொண்டை கட்டிவிட்டது. இக் கட்டு வந்து பேச முடியாத இக்கட்டு வருமென்று எண்ணவே இல்லை" என்றார். (இக்கட்டு-இந்தத் தொண்டைக்கட்டு, இடைஞ்சல்.)

நாணயம்

காளிகாம்பாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு அஸ்திவாரம் போட்டார்கள். அப்போது வந்து அஸ்திவாரத்தில் செங்கல்லைப் பதிக்க வேண்டுமென்று கோயிவைச் சேர்ந்த அன்பர்கன் இவரை அழைத்துச் சென்றார்கள். பூரீராம்தாஸ் கோவிந்ததாஸ் என்ற வணிகரும் வந்திருந்தார். கொட்டு மேளத்துடன் விழா தடைபெற்றது. குறிப்பிட்ட இடத்தில் அஸ்திவாரம் பதித்து அங்கே பூஜை பண்ணினார்கள். நவரத்தினத்தை இட்டார்கள். குறிப்பிட்ட முகர்த்தத்தில் செங்கல்லை இவரும் பிறரும் எடுத்துக் கொடுக்க, ஸ்தபதி அவற்றை