பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 33

அஸ்திவாரத்தில் பதித்தார். "ரூபாய் தாருங்கள். இங்கே போடலாம்" என்று சொன்னார். அவரவர்கள் கால் ரூபாய், அரை ரூபாய் போட்டார்கள். ஒருவர் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். திருப்பணிச் சபையைச் சேர்ந்த திரு. கருப்பையா, "இங்கே நோட்டு உதவாது. நாணயந்தான் வேண்டும்" என்றார். அருகில் இருந்த இவர், "இங்கே என்ன? எங்கேயும் நாணயந்தான் வேண்டும். அதிலும் ஆலயத்தில் அவசியம் வேண்டும்" என்றார். (நாணயம் - நேர்மை, காசு).

சாயச்சுவர்

ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் வண்டிக்காக இவர் காத்துக் கொண்டிருந்தார். இவருடன் ஒரு புலவரும் இருந்தார். வண்டி வரச் சிறிது நேரம் இருந்தது. பெஞ்சுகளிலெல்லாம் ஆட்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், சுவரோரமாக உட்காரலாம் என்று போய் உட்கார்ந்தார். சுவருக்குப் புதிதாக வண்ணம் பூசியிருந்தார்கள். இவர் அதன்மேல் சாயப் போகிறாரே என்று அஞ்சிய உடனிருந்த புலவர், "சுவரின்மேல் சாயாதீர்கள். வண்ணம் பூசியிருக்கி றார்கள்" என்றார்.

"அப்படியா? இது சாயச் சுவரா? சாயச் சுவரானாலும் எனக்குச் சாயச் சுவர் அல்ல."

(சாயச் சுவர் - சாயம் பூசிய சுவர், சாய்வதற்குரிய சுவர்).

இருமல்

இவர் இரண்டு நாள் இருமலால் தொல்லைப் பட்டார். அன்பர் ஒருவர் வந்து பேசிக்