பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ

இவர் விளக்கினார்: "இது தேன் உள்ளே உடைய குழல் போன்ற வடிவுடையது. உள்ளே இருக்கும் ஜீரா தேன்போலத்தானே இருக்கிறது? மற்றொன்று, தேங் குழல். தேம் என்றால் இனிமை. இனிமையான குழல் என்று கொள்ள வேண்டும்." -

கரியே கரி

இவர் பேசியது.

இறைவன் உயிர்களுக்குக் கருணை பாலிப்பதற்காகத் திருவுள்ளம் இரங்கித் திருவுருவம் இறங்கி வருகிறான். நாம் தாயினிடம் கருணையைப் பார்க்கிறோம். அவளும் தன் குழந்தைக்காக எவ்வளவோ இறங்கி வருகிறாள்; தாழ்ந்து போகிறாள்.

ஒர் ஊரில் ஒரு செல்வர் வீட்டுப் பெண்மணிக்கு ஒரு குழந்தை இருந்தது; நாலு வயசு, அந்த வீட்டில் விருந்தினர்கள் அடிக்கடி வருவார்கள். அடுப்புக்கரி மூட்டைகளை ஒர் அறையில் அடுக்கியிருந்தார்கள். அந்த மங்கை நல்லாள், அந்த ஊர் மகளிர் மன்றத் தலைவி. அதன் ஆண்டு விழாவுக்கு ஒரு பெண் மந்திரியை அழைத்திருந்தார்கள். அவருக்கு வரவேற்பு வாசித்தளிக்க வேண்டும்.

அன்று அந்த விழா, பிற்பகலில் மேல் மாடியில் தன்னை அலங்கரித்துக் கொள்ள அந்தப் பெண் போனாள். தலை வாரிக்கொண்டு நல்ல புடைவை அணிந்து நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு ஸ்நோ தடவிக் கொண்டிருந்தாள்; வலக் கன்னத்தில் தடவிக் கொண்டிருந்தாள். அப்போது கீழிருந்து குழந்தை வீரிட்டுக் கத்தியது கேட்டது.