பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ 88

குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அது அடுப்புக் கரியிருந்த அறைக்குள் போய்விட்டது. அதைப் போய் எடுத்திருக்கிறான். கீழே விழுந்து காயம் பட்டு விட்டது. 'ஒ' என்று கத்தினான்.

ஒரே ஒரு குழந்தையாகையால் தாய் மேலிருந்து அவசர அவசரமாக ஒடி வந்தாள். பக்கத்தில் யாரும் இல்லை. நேரே அறைக்குள் போய்ப் பார்த்தாள். பையன் விழுந்து கிடக்கிறான். தலையில் காயம். ரத்தம் வழிகிறது, பையன் கத்துகிறான். அவன் உடம்பெல்லாம்

கரி,

அவனை, "என் கண்ணே!" என்று தாவி எடுத்து அனைத்தாள். இடதுக் கன்னத்தோடு கன்னத்தை வைத்து ஆசுவாசப் படுத்தினாள். அப்போது அவள், நம் ஆடை அழுக்கடையுமே என்று பார்த்தாளா? அவள் கோலம் எப்படி இருந்தது? வலதுக் கன்னத்தில் வெள்ளை ஸ்நோ இடது கன்னத்தில் கரி. அதுதானே அவள் கருணைக்குக் கரி? -

அறியாமை மிகுந்த பெண்ணுக்கே இவ்வளவு கருணை இருக்குமானால், எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு எவ்வளவு கருணை இருக்கும். அவன் இறங்கி வரமாட்டானா? -

வரதராஜன்

திருச்சியில் தாயுமானவர் கோயிலில் நூற்றுக்கால் மண்டபத்தில் திருமுறை விழா நடைபெற்றது. இவர் பேசினார். கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் திருக்குறள்வேள் ஜி. வரதராஜ பிள்ளையவர்கள். இவர் பேசும்போது முன்னுரையில் சொன்னது: "சைவத்