பக்கம்:சிரித்த நுணா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வியல் நாட்டு நகர அமைப்பை ஒவ்வார் எந்த உலகத் துண்டாம்? அறிஞன் ஸ்மீத் நகர வமைப்பில் மேல்நா டெல்லாம் கீழ்நாட் டடிப்படை' என்றனன்; உண்மையை எண்ணுவீர் நீரே! சிற்பம் ஒவியம் செழுங்கலைக் கோபுரம் மேலை நாடு வியப்பது தம்மொடு கைகோத் தொருமையில் கலந்து திகழும் இரசபுத் திரரின் இரவிவர் மாவின் தாஜ்ம காலின் தகுதியே யாகும். ஆனல் இவற்றின் அடிப்படை யாவும் சிற்றன்ன வாயில் சென்ருல் புரியும். கடல்மல்லே காஞ்சி தஞ்சை மதுரை சென்ருல் மேலைக் கீழைநாட் டொருமை இன்று மிருப்பதை யாரே மறுப்பார்? சாக்கைக் கூத்து துன்பியல் முடிவாம்; ஒட்டந் துள்ளல் இன்பத் துயர்வாம்: கதைகளி இரண்டும் கலந்ததே யாகும். இந்நிலை கலவாக் கூத்தெங் குண்டாம்? பிள்ளைக் கிட்டுப் பிணியைப் போக்க வாழைப் பழத்தில் மருந்தை மறைத்துத் தாய்தரு பழமே சான்ருேர் இலக்கியம்: 'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனெடு நட்பே' குறுந்தொகை கூறும் காதலிலக் கணமே! 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/22&oldid=828808" இலிருந்து மீள்விக்கப்பட்டது