பக்கம்:சிரித்த நுணா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப்பாடு பட்டுக் கடும்பசி போக்கு. - கொழுநனைத் திருத்தல் கோதையர்க் கழகு. கோடி கொடுப்பினும் கொள்கையிற் கோடேல். கெளவை வரினும் செவ்வை தவறேல். சல்லியும் பிறர்பொருள் இல்லை.என் ஞதே. சாவாப் புகழை மேவுதல் அழகு. சிறியோர் பெரியோர் அறிவால் விளங்கும். சீரைக் கெடுக்கும் ஆரியம் விலக்கு. சுடுகா டேனும் விடுதலை வேண்டும். சூழ்ச்சியால் பிறரை வீழ்த்தவெண் ணுதே. செய்து நீ காட்டிச் செய்யச் சொல்லு. சேரன் பாண்டியன் போரைப் படித்துணர். சையென உன்னை வையவா ழாதே. சொல்லிலும் செயலிலும் தூய்மையுண் டாக்கு. சோற்றைப் பகிர்ந்தால் வேற்றுமை இல்லை. தனித்தமிழ் போல இனிப்புவே றில்லை. தாயின் சிறந்தது தாய்நா டாகும். திண்ணிய தோள்நல் லெண்ணமும் வேண்டும். தீண்டாமை அகற்ற வேண்டும் மனத்தில். துடியிடை யாரை அடிமையாக் காதே. தூக்கினும் தமிழர் ஆக்கம் தேடு. தெம்முனை செல்ல இம்மியும் தயங்கேல். தேடத் தக்கது கோடார் கேண்மை. தைவரு தென்றல் மெய்யிற் கினிது. தொன்னுரல் படித்தால் நன்மை பயக்கும். தோல்வி வெற்றியின் கால்கோள் ஆகும். 25 30 35 40 45 தெளவையை முதுமையில் செவ்வையாய்ப் பேணு. 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/31&oldid=828818" இலிருந்து மீள்விக்கப்பட்டது