பக்கம்:சிரித்த நுணா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. குமரி சாதி சமயமும் அற்றவள்:-தமிழ்ச் சண்பகக் காவுள் உதித்தவள்; சோதி முகவெழில் திங்களில்-ஒர்நாள் தோகை மயிலெனக் காட்டுவாள்! காதில் எதிரொலி இன்னிசைக்-கவிக் கட்டிக் கரும்பைப் பிழிந்தனள், ஒதும் தமிழ்மொழிக் குயிரிவள்:-பிற உலக மொழியின் தாயவள்! தேனதிற் சீனியைக் கூட்டியே-சதா தித்திக்கும் கட்டுரை செய்தனள்! கானில் திரிந்து மகிழ்ந்திடும்-இளங் கன்றுமான் போலநான் துள்ளினேன்! இருகரம் நீட்டித் தழுவினேன்;-அவள் இன்விழிப் பாகைப் பருகினேன்! அருமைக் குமரி மலரவள்!-செவ் வல்லி சிரித்திடும் குட்டையாம்! மருண்ட வுலகினை மாற்றினள்-புது மங்கை யிளநகைப் பார்வையால்! உருண்டு பெருக்கெடுத் தின்பமே-மலை ஊற்றுப்போற் பாயுதிந் நாட்டிலே! 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/43&oldid=828831" இலிருந்து மீள்விக்கப்பட்டது