பக்கம்:சிரித்த நுணா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. யார்க்குச் சொந்தம் ? கொட்டகையிற் குற்றுயிராய் உழவு மாடு குந்தியழும் உழவனவன் பெண்டு தாயார் கட்டவொரு கந்தையின்றி உண்ணும் பிள்ளை ‘கஞ்சி! கஞ்சி!' எனக்கதறி மாய்ந்தா லென்ன? "எட்டிரண்டும் பத் தென்று நோட்டை யெண்ணி இருப்புவைத்திங் குயிர்வாழும் ஈனச் செய்கை பட்டினத்துப் பெரியபெருச் சாளிச் செய்கை! படுமோசக் காரரிவர் அழிவே இன்பம்! I தோப்பிலதோ கருங்காக்கை கா! கா! வென்று தொண்டைபுண் ணுகிடவே வீட்டில் வந்த மாப்பிளேயை உணவருந்த அழைப்ப தேபோல் மகிழ்வோடு தன்னினத்தைக் கூவிக் கூவிச் சாப்பிடப்பார்த் தென்செய்தோம்? அந்தோ! ஏழைச் சாண்வயிற்றிற் கரிசியெங்கும் கிடைப்ப தில்லை! காப்பாற்றப் பொருளெல்லாம் இயற்கை தந்தாள்! கத்தரிக்காய் கூருக்கிப் பங்கே செய்வோம்! 2 வானந்தான் ஒருவருக்கே வழங்க லுண்டோ? வண்ணமலர், மணம்,நன்செய், புன்செய், தென்றல், காறுை, புள்ளோசை, வெயிலும், இன்பக் கண்கவரு முழுமதியும் யார்க்குச் சொந்தம்? யான் என(து) என்றிருக்கும் அகந்தை அற்ருல் இவ்வுலகில் நிலவுபொருள் பொதுவாம் யார்க்கும்! ஏளுேவிச் சுயவெண்ணத் தடிமை யானேம்? 'எல்லோர்க்கும் பொதுவுடைமை' என வாழ்வோமே!3 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/64&oldid=828854" இலிருந்து மீள்விக்கப்பட்டது