பக்கம்:சிரித்த நுணா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X வாழ்த்து 1. புத்தாண்டு இல்லை என்பாரும், இரந்துண் போரும் இல்லெனச் செய்வாய்! இப்புவி தன்னில் நல்வான் பொழிவாய்! நலிவுகள் தீர்ப்பாய்! கொல்லே றெனத்தமிழ்க் குழவிகள் வளர்ப்பாய்! காரிருட் சிறையின் கதவுகள் திறப்பாய்! ஊருயி ருண்ணும் போரினைத் தடுப்பாய்! தமிழன் உயிராம் தமிழ்க்குடி யரசே! அமுதைப் போற்ற ஆர்வம் அளிப்பாய்! சொல்லிலும் செயலிலும் சுதந்தரம் அளிப்பாய்! அல்லலை நீக்கி நல்லவை புரியும் ஆற்றலும் அறிவும் ஆண்மையும் ஈவாய்! ஏற்றமென் சாதி’ எனும்மனப் பான்மை கனவிலும் தோன்ருக் கருத்தைக் கொடுப்பாய்! தினம்தமிழ் நாட்டின் திருப்பணிக் காகக் கவிபல பாடிக் கதைபல சொல்விப் புவியினைத் தூண்டும் புதுமா னிடய்ை எனவளர்த் திடுவாய்! இல்லெனில் அழிப்பாய்! உன்னைப் பணிவோ(டு) உன்முதல் நாளில் கேட்ப(து) இதுவே. சிறியேன் என்னை ஆட்கொண் டென்சொல் அருள்புது வாண்டே! 68 } {} J5 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/75&oldid=828866" இலிருந்து மீள்விக்கப்பட்டது